08/02/2024
இந்தியாவில் பலர் தற்போது தங்கள் கார்களுக்கு செராமிக் கோட்டிங் (Ceramic Coating) செய்கின்றனர். இது உங்கள் காரின் வெளிப்புறத்திற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அத்துடன் மிகவும் குறைவான பராமரிப்பிலேயே, கார் புதிது போன்று இருக்க உதவி செய்கிறது.உங்கள் கார் மீது அடிக்கடி சூரிய ஒளி விழுந்து கொண்டே இருந்தால், பெயிண்ட் விரைவாக 'டல்' ஆகி விடும். அதாவது மங்கி விடும். ஆனால் சூரியனின் புற ஊதா கதிர்களிடம் (Ultraviolet Rays) இருந்து, உங்கள் காரின் பெயிண்ட்டை செராமிக் கோட்டிங் லேயர் பாதுகாக்கிறது. கார்களுக்கு தற்போது பலரும் செராமிக் கோட்டிங் செய்வதற்கு இதுவே முக்கியமான காரணம்.
நன்மையும் கிடைக்கிறது.
செராமிக் கோட்டிங்கானது, ஹைட்ரோபோபிக் (Hydrophobic) ஆகும். அதாவது தண்ணீரை விரட்டும் திறன் செராமிக் கோட்டிங்கிற்கு உள்ளது. உங்கள் கார் ஹைட்ரோபோபிக் செராமிக் கோட்டிங்கை பெற்றிருந்தால், காரின் மேற்பரப்பில் தண்ணீர் எளிதாக சரிந்து சென்று விடும். அதாவது சேறு போன்ற அசுத்தங்கள் உங்கள் காரின் மேற்பரப்பில் படிவது கடினம்.
அதேபோன்று உங்கள் காரின் பெயிண்ட் மிகவும் நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்கும்..