08/28/2024
ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை, இன்று அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். அவருக்கு வாட்ஸ் ஆப்'பில் யாரோ அனுப்பியிருந்தார்களாம்.
நாம் இந்துவாக இருந்தாலும் அல்லது வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நாம் நம் தாய் நாட்டில் வசித்தாலும் சரி, வெளிநாட்டில் வசித்தாலும் சரி,
சுருக்கமாக, நாம் ஒரு மனிதராக இருக்கும் பட்சத்தில் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் நமக்குக் கட்டாயம் பொருந்தும்.
நம் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நாம் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நாம் பிற்காலத்தில் ஆதரவற்றவர்களாகி விடுவோம் - உதாரணம் 'கௌரவர்கள்'.
நாம் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால் நம் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும். உதாரணம் 'கர்ணன்'
நம் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி அழிவு செயல்களில் ஈடுபடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோமானால், நாமும் நம் பிள்ளைகளும் நிச்சயமாக நாசமாகி விடுவோம். உதாரணம் 'துரோணர் மற்றும் அஸ்வத்தாமா'.
“அறமற்ற அநியாயக்காரர்களிடம் பணிந்தால் நிம்மதியான மரணம் ஏற்படாது. மேலும் கண்மூடித்தனமாகக் கொடுக்கும் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முயன்றால் நம்மையும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பேரழிவு ஏற்படும். உதாரணம் 'பிதாமஹர் பீஷ்மர்'
செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் தவறு செய்பவர்களின் ஆதரவு ஆகியவற்றின் துஷ்பிரயோகம் இறுதியில் மொத்த அழிவுக்கு வழிவகுக்கிறது. உதாரணம் 'துரியோதனன்'
ஒரு குருடனிடம் அதிகாரக் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள்.. அதாவது சுயநலம், செல்வம், தற்பெருமை, அறிவு, மற்றும் முறையற்ற காமத்தால் குருடனாக இருப்பவர், அது நம் வம்சத்தையே அழித்து விடும். உதாரணம் 'திரிதராஷ்டிரன்'
அறிவுடன் ஞானமும் இறைவன் துணையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உதாரணம் 'அர்ஜுனன்'
வஞ்சகம் நம்மை எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் வெற்றிக்கு அழைத்துச் செல்லாது. உதாரணம் 'சகுனி'
நாம் நல்ல நெறிமுறைகள், நீதி மற்றும் கடமையை வெற்றிகரமாக நிலை நிறுத்தினால், உலகில் எந்தச் சக்தியும் நமக்குத் தீங்கு செய்ய முடியாது. உதாரணம் 'யுதிஷ்டிரர்'
பொறுமையாக யோசித்துப் பார்த்தால், மேலே கூறப்பட்டுள்ள பல விஷயங்களை என் வாழ்வில் நடந்த சம்பவங்களுடன் என்னால் பொருத்தி பார்க்க முடிகிறது.
"சர்வே பவந்து சுகினா - ஸர்வே சந்து நிராமயஹ்."
-படித்ததை பகிர்ந்தேன்.♥️🙏👍